மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது பெயரை தொடர்புபடுத்தி யூடியுப் அலைவரிசையொன்றின் ஊடாக போலி தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதிக்கு உட்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து உள்ளிட்ட 10 வகையான மருந்துகள் தொட்ரபில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குறித்த செயற்பாட்டாளர் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி தகவல்களை வெளியிட்டுள்ளதாக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நட்டஈடு கோரிக்கைக்கு எதிராக செயற்பாட்டால் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும் சம்மன் ஊடாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





