மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது.
சைவ மன்றத்தின் நிதி உதவியுடன் சமூக நலன்புரி நிறுவனத்தினால்,மூன்றாம் கட்டமாக, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் கால்நடையாக நீண்ட தூரம் பயணம் செய்து பாடசாலை செல்கின்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு, நேற்று 2025.12.23 (செவ்வாய்க்கிழமை) காலை 10.40 மணிக்கு, பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் முன்னிலையில் மாணவர்களுக்கு இத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் நிறுவன உத்தியோகஸ்தர்கள் பங்குகொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)











