மட்டக்களப்பு .திராய்மடு MOUNTAIN KIDS முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும்-2025















































































மட்டக்களப்பு  திராய்மடு MOUNTAIN KIDS  முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும்  மட்டக்களப்பு திராய்மடு மாகாண சுகாதார பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது  .

 ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் ..மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய    தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள் இடம் பெற்றன.

 முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன்   பிரதம  அதிதியாகவும் , கௌரவ  அதிதிகளாக  வைத்தியர் K.தர்ஷினி மற்றும்     REV.FR.C.வென்செஸ்லஸ் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் L.விஜேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 பாடசாலைச் சிறார்களின் ஆடல், பாடல் ,கதை, பேச்சு, கவிதை  கிராமியக் கலைகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரை மேன் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
 MOUNTAIN KIDS  முன்பள்ளி சிறுவர்களின் ஆற்றல் திறனை அவர்களது ஆற்றுகைகள் வரித்துக் காட்டின.
சிறார்களை பயிற்றுவித்த முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் .
முன்பள்ளி சிறார்களுக்கு  அதிதிகளால்    பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள். 
 நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சிறார்களுக்கும்  பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன . அதிதிகளுக்கும் பாடசாலை சமூகத்தால் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில்  ஆசிரியர்கள் பாடசாலை மாணவ  சிறார்கள்  பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள்  பிரதேசவாழ்  பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.

EDITOR