வெள்ள அனர்த்த நிவாரணம் பற்றிய விளக்கம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது .

 


 

பெயர்ப் பட்டியல் பிரதேச செயலகங்களில் ஒட்டப்படும் இந்நேரத்தில் உங்களுக்கு வெள்ள அனர்த்தத்துக்காக கிடைக்கக்கூடிய ஏனைய நிவாரணங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

இவற்றில் சில ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளன. (ஒன்று கிடைக்காவிட்டால் மற்றையதையும் பெறமுடியாது. அதே நேரம் ஒன்று கிடைத்தால் கட்டாயமாக மற்றையதும் கிடைக்க வேண்டும் என்றும் இல்லை).

15 வகையான நிவாரணங்கள் பற்றி சுற்றறிக்கையில் விபரமாக உள்ளன.
இங்கே இலகு விளக்கத்துக்காக..

பிரதேச செயலக பொறுப்பில்,
🔴வீடு சுத்தம் செய்ய - ரூ. 25,000 (வீட்டுக்கு)
🔴வீட்டுப் பொருட்கள் வாங்க - ரூ. 50,000 (வீட்டுக்கு)
🔴வீடு அழிந்தால் 6 மாதம் வரை வாடகைக்கு - ரூ. 25,000 (வீட்டுக்கு)
🔴புதிய வீடு கட்ட - ரூ 50 லட்சம் (வீட்டுக்கு)
🔴காணி வாங்க - ரூ 50 லட்சம் வரை (வீட்டுக்கு)
🔴வீடு திருத்த - ரூ. 25 லட்சம் வரை (வீட்டுக்கு)
🔴உயிர்ச்சேதம்/அங்கப் பாதிப்பு எனில் - ரூ 10 லட்சம் (நபருக்கு)

🔴வாழ்வாதாரம் இழந்தால் -
:- 2 பேருக்கு குறைவென்றால் 3 மாதத்துக்கு தலா ரூ. 25,000 (குடும்பத்துக்கு)
:- 2 பேருக்கு கூடவென்றால் 3 மாதத்துக்கு தலா ரூ. 50,000 (குடும்பத்துக்கு)
🔴பாடபுத்தகம் உடைகள் வாங்குவதற்கு பாடசாலை மாணவருக்கு - ரூ. 15,000, தேவைக்கேற்ப + ரூ. 10,000 (இடம்பெயர்ந்த மாணவர் ஒவ்வொருவருக்கும்)

🔴சிறுதொழில் முயற்சிகளை மீட்க - ரூ. 2 லட்சம் (அலகொன்றுக்கு)
🔴வணிக கட்டிடம் திருத்த - சேத மதிப்புக்கமைய ரூ. 50 லட்சம் வரை (கட்டிடத்துக்கு)

கமநல திணைக்களங்கள் பொறுப்பில்,
🔴தானிய பயிர் அழிந்தால் - ரூ150,000 (ஹெக்டயருக்கு)
🔴மரக்கறி பயிர் அழிந்தால் - ரூ200,000 (ஹெக்டயருக்கு)

கால்நடை திணைக்கள பொறுப்பில்,
🔴பதிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணை அழிந்தால் - ரூ 200,000 (உரிமையாளருக்கு)

கடற்றொழில் திணைக்கள பொறுப்பில்,
🔴மீன்படி படகு சேதமடைந்தால் - ரூ. 400,000 (படகொன்றுக்கு)

ஆகவே வீட்டுக்கு கொடுக்கும் நிவாரணத்தை குடும்பத்துக்கென்றும், குடும்பத்துக்கு கொடுக்கும் நிவாரணத்தை வீட்டுக்கென்றும் முரண்படாமல் தெளிவாக கேட்டுப்பெற்றுக்கொள்ளவும். அதிகாரிகளும் குழப்பமில்லாமல் பதிவு செய்து கொடுக்கவும்.

மக்களே உடனடியாக...
பிரதேச செயலகம் செல்லவும் -> பெயர் பட்டியலை பார்க்கவும் -> வங்கிக்கணக்கில் நிவாரணத்தை பெறவும்.

முறைப்பாடுகள் இருப்பின்,
பிரதேச செயலகத்தில் முறையிடவும்.

அங்கும் தீர்வு இல்லையேல்,
மாவட்ட செயலகத்தில் முறையிடவும்.

அங்கும் தீர்வு இல்லையேல்,
ஜனாதிபதி செயலகத்துக்கு முறையிடவும்.