மட்டக்களப்பு EPP அக்கடமியை சேர்ந்த வீரர்கள் 10 நாள் பயணமாக
இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கே அவர்கள்
T20 போட்டிகளிலும், 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட
இருக்கின்றார்கள்.இவர்களை அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்றரை மைதானத்தில், கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சடாச்சரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோட்டைமுனை கிராமத்தின் தலைவர் காசிப்பிள்ளை சதீசன் அவர்களும், மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களான திருவாளர் ரஞ்சன் அவர்களும், திருவாளர் சிவநாதன் அவர்களும், தயாசிங்கம் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
எனவே இந்த நிகழ்வினை வழியனுப்பி வைப்பதற்காக EPP பிள்ளைகளின் பெற்றோர்கள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
20 வீரர்களும் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் 20ஆம் தேதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டார்கள் . அவர்கள் மீண்டும் இலங்கையை 30ஆம் தேதி வந்தடைய இருக்கின்றார்கள்.




.jpeg)
.jpeg)




