மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஓவியத்தூறல்கள் எனும் தலைப்பில் இன்றைய தினம் ( 22) களுவாஞ்சிக்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வு நிலை இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் ம.தயாபரன் , கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பேராசிரியர் சு. சிவரெத்தினம், பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது , மாணவர்கள் மற்றும் சித்திரப் பாட ஆசிரியர்களால் வரையப்பட்ட பல்வேறு கண்கவர் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது





