வாகரை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜ பவர் அமைப்பின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .



 




வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு  ஜ பவர் அமைப்பின்   ஏற்பாட்டில் 
கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   ஐ பவர் அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,
 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.