மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இளைஞர், யுவதிகளுக்கான அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் தொடர்பான தலைமைத்துவ பயிற்சி முகாம் இடம்பெற்றது.
























இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து  ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான அனர்தங்களுக்கு முகம் கொடுத்தல் தொடர்பான தலைமைத்துவ பயிற்சி முகாமானது இன்றைய தினம் (2025.12.24) பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் தலைமையின் கீழ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன்  அவர்களின் நெறிப்படுத்தலில் கீழும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி முகாமுக்கு வளவாளராக இலங்கை செஞ்சிலுவை சங்க பயிற்றுவிப்பாளர் திரு த. வசந்தராசா அவர்கள் கலந்து கொண்டு இளம் சமுதாயத்தினர் தங்கள் கிராம சேவகர் பிரிவுகளில் அனர்தங்களுக்கு முகம்கொடுத்தல், அனர்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளல் மற்றும் முன்னாயத்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை மிகவும் சிறப்பான முறையில் விளக்கமளித்திருந்தார்.

 இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு த . சபியதாஸ் அவர்கள் ஒழுங்கமைத்திருந்த இந்த பயிற்சி முகாமில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  இளைஞர் கழகங்களிலிருந்து 75 இற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

இந்த பயிற்சி முகாமில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் திரு H U  சுசந்த, மாகாண பிரதி பணிப்பாளர் திரு ஆலுதீன் ஹமீர், உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்  இறுதியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.