மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள்.







மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு    சாத்தியவள அறிக்கை தயாரித்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2025.12.10 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில்  நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வளவாளராக பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அ.சுதர்சன்  அவர்கள் கலந்து பயனுள்ள வகையில் நடாத்தி இருந்தார்.

இப்பயிற்சி நெறியினூடாக  உத்தியோகத்தர்கள்  அறிக்கை தயாரித்தல் தொடர்பான பூரண தெளிவூட்டலை  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.