மகளை வன்புணர்ந்த காம கொடூர தந்தை, பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய தாயார்.. கிழக்கில் பயங்கரம் .

 


ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12)  சம்மாந்துறை  நீதவான் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை  அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்  1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நிந்தவூர் பொலிஸார்  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு   அதிகாரிகளிடம்  சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட  சிறுமியை நிந்தவூர் பொலிஸ்  நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த விடயங்களை குறித்த  சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக  12 வயது மதிக்கத்தக்க தனது மகளை  முதலில் ஆபாச படம் பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை பின்னர் சம காலத்தில்  ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துவந்தமையும்  ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தந்தை உட்பட 5 பேரை தற்போது கைது செய்துள்ள பொலிஸார்  தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் 52, 41, 24 மற்றும் 40  வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை  பல்வேறு நபர்களுடன் பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியதாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.