குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம்
சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல
என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில்,
வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும்
நிகழ்வு ஒன்றில் நேற்று(21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை
தெரிவித்தார்.
மேலும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, கல்வி முறையைப் பலப்படுத்துவோம்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களின் தண்ணீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.
அண்மையில் நடத்தப்பட்ட முன்னேற்ற
மீளாய்வின்படி, வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம்
திருப்திகரமாகஇல்லை. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும்.
2026ஆம் ஆண்டில் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.





