கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாட்டுப்போட்டியில் மாகாண மட்டத்தில் 4ம் இடமும்
மட்டக்களப்பு மாவட்டத்தில்2 ம் இடமும் பெற்றமைக்காக பல்துறை கலைஞரும் , மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தருமாகிய ஆரையம்பதி மண்ணின் வேல்முருகு பிறேமதீபன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இவருக்கான விருதினை கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் அவர்கள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் கலாசார அரங்கில் 20.12.2025ம்திகதி வழங்கி கௌரவித்தார்







