மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவ முகாம் சேவைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 24 வயதிற்குட்பட்ட விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், அக்சன் யூனிட்டி லங்கா, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுதிறனாளிகள் சம்மேளனம் இணைந்து இவ் விசேட மருத்துவ முகாமை ஒழுங்கமைப்பில் சிறுவர் நிதியத்தின் நிதி அனுசரனையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது சக்கர நாற்காலிகள், காதுகேள் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவையுடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் குழந்தை நல வைத்திய நிபுணர்களான சிவபாதம் விஷ்ணு, வி.விஜயகாந்த், கே.பிரார்த்தனா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கே.சந்திரகலா, அக்சன் யூனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே. கஜன், நிகழ்ச்சிதிட்ட முகாமையாளர் ஞா.அ.சூரோஸ், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஐஸ்வர்யா தேவி, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுதிறனாளிகள் சம்மேளன தலைவர் எஸ். அருள்ராஜா என பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)





