புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
இயற்கை அனர்த்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் முகமாக பொலன்நறுவை தொடக்கம் புனானை வரையிலான சேவைகள் தற்போது பரீட்சாத்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்
நேற்று இரவு மாஹோவில் இருந்து மட்டக்களப்புக்கான பயணிகள் புகையிரதம் ஒன்று தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டு புகையிறத பாதைகள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை இன்று மட்டக்களப்பு புகையிறத நிலையத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகளை சீர்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது
எனவே புகையிறத பாதையை அண்டிய பொதுமக்கள் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் தற்போது பரீட்சாத்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால் மிகவும் அவதானமாக செயல்படுமாறு மட்டக்களப்பு புகையிறத நிலைய அதிபர் T.வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரதன்










