நாகொட - அத்தனகல்ல ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 


நாகொட - அத்தனகல்ல ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

அத்தனகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.