மனிதனுக்காய் உலகம் பிறந்தது.
நீங்கள் பிறந்த பின்தான் உங்களுக்கு முன் (கி.மு) உங்களுக்கு பின் (கி.பி) எனப் பிரிந்தது.
கூட இருப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்படுவோம் என்றிருந்தும் அவர்களின் காலைக் கழுவியவர் நீங்கள்.
பாவத்தின் தண்டணைக்கு அடையாளமாய் இருந்த சிலுவை உம்மை அரவணைத்ததால்
மரங்கள் மரணிப்பவை இல்லை என்றானது.
கடவுளைக் காட்டிக்கொடுத்த உம்மை
உலகம் மரணத்துக்கு காட்டிக் கொடுத்தது.
" இன்னமும் இவர்கள் செய்வது
இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் இவர்களை மன்னியும்"
என்று நீர் வேண்டிக்கொண்டது இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது நீர் அவதரித்த ஒவ்வொரு நாளிலும்....
ஜேசு கிறிஸ்து இப் பூமியில் அவதரித்த புனித நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
EDITOR





