மட்டக்களப்பு தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு.

 







மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 23.12.2025 வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் அரசியல் பணிமனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, மாவடிவேம்பு, களுவன்கேணி மற்றும் கொம்மாதுறை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்காக குறித்த சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு. முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவரும் திரு. த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு. நாகேந்திரன், திரு. வவானந்தன், தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.