தென்கிழக்கு ஆசியா
முழுவதும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட பேரழிவால் தானும் தனது மனைவியும்
மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரித்தானியாவின் மூன்றாம் மன்னர் சார்லஸ்
கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த புயல்கள், பாதிக்கப்பட்ட அனைவரின்
வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் எவ்வளவு பாதித்திருக்கும் என்பதைக்
கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்தில்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நாட்களில் அவசர
நிலைகளுக்குத் துணிச்சலுடன் பதிலளித்து அத்தியாவசிய உதவிகளை வழங்கும்
அனைவரையும் பாராட்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





