நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்கள் கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து தவிசாளர் எஸ் சுதாகரன் தலைமையில் நுவரெலியா நோக்கி புறப்பட்டது.








அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் முகமாக பொருட்கள் அடங்கிய  வாகனங்கள் இன்று அதிகாலை  கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து தவிசாளர் எஸ் சுதாகரன் தலைமையில் நுவரெலியா நோக்கி  புறப்பட்டது.

 "அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் வாருங்கள்'" என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை  பிரதேச நன்கொடையாளர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள்  இணைந்து இவ் நிவாரணப் பொருட்கள் வழங்கியிருந்தனர்.

 

  ந.குகதர்சன்