மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை நிலைமை குறைவடைந்ததன் காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் வந்து குறித்த ஆபத்தான இடங்களைப் பரிசோதிக்கும் வரை பொதுமக்கள் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி ஹசலி சேமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தப் பாதிப்புக்களால் பெருமளவில் வீடுகளும் அழிந்துள்ளதுடன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதிகளைப் பரிசோதிக்கும் வரை அங்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





