தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.









தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை  டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதன் அடிப்படையில்   வீடுகள், வர்த்தக நிலையங்கள்  பொது இடங்களை பார்வையிடும் திட்டத்தில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பரிசோதனைகள் இன்று  இடம் பெற்றன.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் மேற்பார்வை பொதுச்சுகாதார    பரிசோதகர் ஏ.எல்.நௌபர் பொது சுகாதார பரிசோதகர்கள்,வாழைச்சேனை பொலிஸார், கிழக்கு சமூக நல அமைப்பு அங்கத்தவர்கள்,  சிலோன் ஓபன் கெம்பஸ் ஓட்டமாவடி கிளை மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ்வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இன்று 448 வீடுகள் பார்வையிடப்பட்டதுடன் வீட்டுச்சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்காதவர்கள் நுளம்புகள் பெருகக்கூடிய நீர்தேங்கக்கூடிய பொருள்களை அகற்றாதவர்கள வீட்டுக்கூரைப்பீலியை சுத்தப்படுத்தாதவர்களுக்கு ஏதிராக  டெங்கு தடைச்சட்டத்தின் கீழ் மூன்று பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பத்து பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு பிரதேசத்தில்  வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது. 


  ந.குகதர்சன்