'டிட்வா' சூறாவளியால்
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு
இதுவரை 299,513 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை
மையம் (NDRSC) தெரிவித்துள்ளது.
குறித்த நிவாரணத்தைப் பெற சுமார் 469,457 வீடுகள் தகுதி பெற்றுள்ளன.
இதில் எஞ்சியுள்ள 169,944 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் தற்போது நிலுவையில் உள்ளன.
இந்த நிவாரணத் திட்டத்திற்காக மொத்தமாக 7.487 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வீடு அல்லாத ஏனைய துறைகளுக்கான
நட்டஈடு வழங்கும் பணிகள் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும்
என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் வீடுகளுக்கான மேலதிக நட்டஈடு கொடுப்பனவுகள் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





