பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

 


அனர்த்தங்களினால்
 பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். 
 
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளி காரணமாக இந்த பாடசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாகத் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன விடுத்துள்ள அறிக்கையில், சூறாவளியால் பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த விஜயத்தின் போது ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேனநாயக்க, ஊவா மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாகாண சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
மேலும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.