2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் கூலி ட்ரெய்லர் யூடியூப்பில் முன்னணியில் .

 


2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
 
சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் திரைப்படங்களும் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தன.
 
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 
அதனடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.
 
இரண்டாவதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான தக் லைஃப் திரைப்படம் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் 39 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மூன்றாவது இடத்திலுள்ளது.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நான்காவது இடத்திலுள்ளது.
 
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஐந்தாவது இடத்திலுள்ளது.
 
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஆறாவது இடத்திலுள்ளது.
 
தனுஷ் இயக்கி நடித்த படம் இட்லி கடை திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஏழாவது இடத்திலுள்ளது.
 
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'மதராஸி' திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து எட்டாவது இடத்திலுள்ளது.
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் காளமாடன் திரைப்படம் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒன்பதாவது இடத்திலுள்ளது.
 
துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த காந்தா திரைப்படம் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பத்தாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.