மட்டக்களப்பு நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்-2025
































  

















  









மட்டக்களப்பு  நாவற்குடா சுத்தானந்தா   பாலர் பாடசாலையின்    ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு  -2025-நாவற்குடா சுத்தானந்தா   பாலர் பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் N.தனஞ்ஜெயன் தலைமையில் இடம் பெற்றது .

 ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் ..மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம்   ஆகிய    தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள் இடம் பெற்றன.

 பிரதம  அதிதியாக  மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்  சிவம் பாக்கியநாதன் அவர்களும்  கௌரவ  அதிதியாக மாநகரசபை பிரதி 
 முதல்வராக Y.தினேஷ்குமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக  மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி A.உமாச்சந்திரன் மற்றும் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் K.ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .

 விழாவில் சிறுவர்களின்  கலை நிகழ்ச்சிகள் அதிதிகளையும் பெற்றார்களையும் வெகுவாக கவர்ந்திருந்தன.

 முன்பள்ளியில் சிறப்பாக ஆரம்பக் கல்வியைப் பெற்று கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு திறமை காட்டிய  சிறார்களுக்கு  அவர்களின் படம் பொறிக்கப்பட்ட அழகான  நினைவுச் சின்னம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.  

  மட்டக்களப்பு  நாவற்குடா சுத்தானந்தா   பாலர் பாடசாலையானது  ஸ்தாபிக்கப்பட்டு  25வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதிபரும் இரண்டு ஆசிரியர்களும் இங்கு பணியாற்றிக்கொண்டிருப்பதோடு    UKG. மற்றும் LKG  19 மாணவர்கள் இங்கு கற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்து .

  இந்நிகழ்வில்  ஆசிரியர்கள், பாடசாலை   சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள்,  பிரதேசவாழ்  பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.

 EDITOR