மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது (19/12/2025) இன்று பிரதேச செயலக வளாகத்தில் பிரதேசசெயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட் , கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு எஸ். ராஜ்பாபு திட்டமிடல் பணிப்பாளர் திரு சுதர்சன் கணக்காளர் திரு அ. மோகனகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பதின்னான்கு(14) பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் ஒன்பது(9) பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் மற்றும் ஜந்து(5) பயனாளிகளுக்கு நீர்ப்பம்பி, நீர்க்குழாய்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)
.jpeg)
.jpeg)




.jpeg)





