ஒரே மனிதன் 100குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

 


அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுள்ள சீன கோடீஸ்வரர் ஒருவர், அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்க் குடும்பத்தில் சம்பந்தம் செய்து, ஒரு பெரிய வம்சாவளியை உருவாக்க வேண்டும் என்பதே தன் இலட்சியம் என்று கூறியுள்ளார். 
 
சீனாவில் பிரபல இணையத்தள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் 48 வயதான சூ போ என்பவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
தன்னை 'சீனாவின் முதல் தந்தை' என்று அவரே அவரை அழைத்துக் கொள்கிறார். 
 
இவருக்கு, ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே இலட்சியமாம். 
 
இது தொடர்பாக சீன சமூக வலைத்தளம் ஒன்றில் அவர் பதிவொன்றை இட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
அந்த பதிவில், குறைந்தது 50 அறிவான மகன்களை பெற வேண்டும். நான் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்புகிறேன். அவர்களே எதிர்காலத்தில் என் நிறுவனத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வர். என் குழந்தைகள் வளர்ந்த பின், அமெரிக்கத் தொழிலதிபர் ஈலோன் மஸ்க்கின் குழந்தைகளை மணம் முடிக்க வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய குடும்ப வம்சாவளியை உருவாக்குவோம். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
சூ போவின் இந்த திட்டம், மஸ்க்கை ஈர்த்ததாக சொல்லப்படுகிறது.