பூண்டுலோயா விவேகானந்தா அகதி முகாமில் ஒஸ்கார் உதவிகள் வழங்கிவைப்பு!

 





 






 







 
 



 
 
இந்நிகழ்வு  பூண்டுலோயா விவேகானந்தா மத்திய கல்லூரி அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் பாடசாலை அகதி முகாமில் நடைபெற்றது .

கூடவே பூண்டுலோயா தூவானம்பீலி ஆலய குரு சண்முகம் குருக்கள் மற்றும் பூண்டுலோயாஓய்வு நிலை அதிபர் எஸ்.சிவலிங்கம் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
 
ஒஸ்காரின் உறுப்பினர்களான காரைதீவு மக்கள் இதற்காக பூரண அனுசரணையை வழங்கியிருந்தனர்.

ஒஸ்கார்  தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான  குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டம் முதற்கட்டமாக பொலனறுவை கல்எல கிராமத்திற்கும் , பின்னர் பெருந்தொகை நிவாரணம் மலையகத்தின் மகியங்கன கண்டி கம்பளை பூண்டுலோயா பதுளை பசறை போன்ற நாலா பக்கங்களிலும்  வழங்கி வைக்கப்பட்டன.

 ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வைத்தனர்.

 ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன்,  வி.தஸானந்த்,  என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.

(பூண்டுலோயாவில் இருந்து  வி.ரி .சகாதேவராஜா)