தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம்.

 



இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். 
 
டிசம்பர் 22 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற மாணவிகளின் சுகாதார நலன் குறித்த கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 
2024 இல் கிராமப்புற, தோட்டப்பகுதி மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 1.44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 
 
தகுதியுள்ள ஒவ்வொரு மாணவிக்கும் அணையாடைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 1,440 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.