முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் 11/11/2025 ம் திகதியன்று மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் திரு இ. சிவலிங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு பே.சுகநாதன் , திருமதி தே.சுதாகரன், திருமதி க. ஜீவராசா, சமூகசேவை கிளை உத்தியோகத்தர்களால் இணைந்து ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திரு அ. ஜெயநாதன் உதவி கல்வி பணிப்பாளர் முறைசாரா கல்வி பிரிவு வலயக்கல்வி அலுவலகம் , திருமதி ம. கோவிதா சட்டத்தரணி , திரு ஜி. திலக்ஷன் சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார வைத்திய அலுவலகம் ஆரையம்பதி, திரு த. நிஷாந்தன் ஆற்றுப்படுத்தல் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிரதேச முதியோர், மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோர் பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரித்தல் தொடர்பான மனப்பாங்கினை விருத்தி செய்தல், நம்பிக்கை மற்றும் நல்லுறவினை கட்டியெழுப்புதல், அவர்களுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும், உடல் உள மற்றும் சுகாதார பராமரிப்பு தொடர்பான வழிகாட்டல்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை சமூகத்தில் உள்ளடக்குதல், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அணுகும் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் கரத்தரங்காக அமைந்திருந்தது.
இதனூடாக பிரதேச முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது பாதுகாப்பு, பராமரிப்பு உள நலம் சுகாதாரம் சட்டங்கள் என்பவை தொடர்பாக பூரண தெளிவினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


-siva.jpg)



-siva.jpg)


-siva.jpg)



-siva.jpg)






