சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலமும் கௌரவிப்பு நிகழ்வும் - தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை

















































































சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு LIONS CLUB , மட்டக்களப்பு SINGING FISH.   .LIONS CLUB OF LADY STARS FOR HUMANITY 
, நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியன  இணைந்து   ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து   பிரதான மண்டபத்துக்கு  அழைத்து வரப்பட்டனர்,
 தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், மௌன அஞ்சலியைத் அடுத்து   நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை   தலைவர்    நா .இதயராஜன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அரிமா கழக மாவட்ட ஆளுநர் LION-   க .லோகேந்திரன் கலந்து கொண்டார்  .
லியோ மாவட்ட தலைவர் LION-டாக்டர் பாரதி கெனடி  கௌரவ விருந்தினராக  பங்கேற்றிருந்தார்.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலைபழைய மாணவன் அன்டனி  விமல தாஸ் மற்றும் மட்டக்களப்பு பாடும் மீன் அரிமா கழக தலைவர் LION-தி .மனோகரன் ஆகியோர்  ஆரம்ப  உரையாற்றினார்கள் .
தரிசனம் விழிப்புலனற்றோர்பாடசாலை பொருளாளர்  .LION அ.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.
 கல்முனை கோமெர்சல் வங்கி  முகாமையாளர் பேவியன்   கனகசபை  விசேட விருந்தினர் உரையாற்றினார் 

 அரிமா கழக மாவட்ட ஆளுநர் LION-   க .லோகேந்திரன் அவர்களால் பாடசாலை   தலைவர்    நா .இதயராஜன் அவர்களுக்கு வெள்ளைப்பிரம்பு வழங்கி வைத்ததோடு அரிமா  கழக உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார் .
தொடர்ந்து அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டன .
அரங்கத்தில் கூடியிருந்தவர்களை  மகிழ்வூட்டும் வகையில் 
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின்   கலாச்சார நடனங்கள் ,பாடல்கள் என்பன சிறப்பாக இடம் பெற்றன .

 உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் ப.டிஷாந்தனின்  நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது .

EDITOR.