மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் சமூக செயற்பாட்டாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

 


மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில்  போலி காணி உறுதிகளைக் கொண்டு காணிகளை அபகரிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை கல்லடி பாலத்திற்கு அருகில் முன்னெடுத்துள்ளனர். 

  கல்லடி பாலத்திற்கு அருகில் காணப்படும் நீண்டகாலமாக வடிச்சல் காணியாகவுள்ள நிலையில் அதனை அடைத்து நிரப்புவதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியானது கடுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவதுடன் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதிகளும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.