2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல்கள்
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
வாக்காளர்
ஆவதற்குத் தகுதிபெறும் ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் பெயர் இந்தப்
பட்டியலில் உள்ளடக்கப்படுவது அத்தியாவசியமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒரு
செயல்முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்துக்
கருத்துத் தெரிவித்த பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த முக்கிய செயன்முறை மூலம், தகுதியுடைய
அனைத்துப் பிரஜைகளினதும் பெயர்கள் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படுவதை
உறுதிசெய்வதில் ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதெனக்
குறிப்பிட்டுள்ளார்.





