பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

 


 பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கடந்த செப்டெம்பர் மாதத்தில் புதிய சட்டமூலத்துக்கான முன்மொழிவுகளை நிறைவு செய்வதாக அறிவித்திருந்தது.

 எனினும், குறித்த குழு, இன்னும் தமது பணிகளை நிறைவுறுத்தவில்லை என நீதி அமைச்சு தரப்புகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, குறித்த முன்மொழிவை விரைவில் வெளிக்கொணரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை என்பன அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

 அரசாங்கமும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறைவுறுத்த போவதாகவும் அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்மொழிய உள்ளதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.