நேற்று சொறிக்கல்முனை சேமக்காலையில் சவக்காலை பெருநாள்

 

















.அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில் இறந்த ஆத்துமாக்களின் நித்திய இளைப்பாற்றி  திருப்பலி நேற்று மாலை(2) இடம்பெற்றது.

 திருப்பலியினை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத் தந்தை ஜீனோ சுலக்சன் ஓப்புக் கொடுத்தார்.

இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறையை அலங்கரித்து தீபம் ஏற்றி இறந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன். கல்லறைகளையும் ஆசீர்வாதம் செய்தனர்.

இந்நிகழ்வில் அருட் சகோதரிகள், இறந்தவர்களின் உறவினர்கள்,  பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க மக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
 
( வி.ரி.சகாதேவராஜா)