சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி கோட்டத்தின் அகத்தியர் வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், நளீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 



