மின்சார சபை மறுசீரமைப்பின் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அத்துடன், மின்சார சபையின் பணிகள்
மற்றும் பொறுப்புக்களைப் பூரண அரச அங்கீகாரம் பெற்ற நான்கு நிறுவனங்களிடம்
கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அடுத்த ஆண்டு முதல் முறையாகச் செயற்படுத்தப்படும் என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற
வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை எண்ணெய்
தாங்கிகளில் 24 தாங்கிகள் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பில்
உள்ளதாகவும், 14 தாங்கிகள் இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்தின் பராமரிப்பில்
உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





