மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.ஹில்மாதஹாநாயக்க பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (07) இன்று இடம் பெற்றது.
போசாக்கு தொடர்பாக அதிக சவால்களை எதிர்நோக்கும் முன்னுரிமை மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதனால் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை Multi Sector Action Plan for Nutrition (MSAPN)
நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு. கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மத்தி மற்றும் மண்முனை மேற்கு போன்ற நான்கு பிரதேச செயலக பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் போசாக்கின்மை தொடர்பாக பிரதேச செயலக ரீதியிலான முன்வைப்புக்கள் பிரதேச செலாளரினால் முன்வைக்கப்பட்டதுடன் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களும் இதன் போது பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில்
யுனிசப் நிறுவன சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முகாமையாளர் வைத்தியர் அப்னர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், SUN PE நிறுவன திட்ட பணிப்பாளர் விஷாக்கா திலகரத்ன, துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



.jpeg)




.jpeg)


.jpeg)





