பூரணை தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த மதுபானசாலைக்கு சீல் வைக்கப்பட்டது, ஜா-எல யில் சம்பவம் .

  


பூரணை தினத்தன்று (5) சட்டத்தை மீறி மதுபானம் விற்பனை செய்த மதுபானசாலைக்கு முத்திரையிடப்பட்டுள்ளது. 
 
ஜா-எல மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
பூரணை தினத்தன்று (5) சம்பந்தப்பட்ட மதுபானசாலை திறந்திருந்ததால் அதற்கு முத்திரை வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.