பாடசாலை நேரத்தை பிற்பகல் இரண்டு மணிவரை நீடிப்பதில் எவ்வித பிரச்சினையும் தோன்றவில்லை- பிரதமர் ஹரிணி அமரசூரிய

 


பாடசாலை நேரத்தை பிற்பகல் இரண்டு மணிவரை நீடிப்பதில் எவ்வித பிரச்சினையும் தோன்றவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 
 
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
பிற்பகல் இரண்டு மணிவரை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக சாதகமான பதில்களே அதிகமாக கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.