பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்குடா கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.










பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான  டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்விச்சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்குடா  கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

புதிய கல்விச்சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் நடமாடும் சேவையிலும் பங்கேற்றார். 

இந்நடமாடும் சேவையின் போது, கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத்தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும்  வழங்கியுள்ளார். 

வலயக்கல்விப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான க.திலிப்குமார், உதவி, பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

  ந.குகதர்சன்