யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது .






யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 24 வயது மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.