பாடசாலை மாணவர்களிடையே, புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 




பாடசாலை மாணவர்களிடையே, புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாசப்பிரிவு மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். 
  
அவர்களில், 14 அல்லது 15 வயதினரிடையே , சிகரெட் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இளம் வயதினரிடையே புகைபிடித்தல், நுரையீரல் தொடர்பான நோய்களின் அதிகரிப்பிற்கு பாரிய பங்களிக்கும் என்றும் மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.