இலங்கைக்கு வருகைத் தந்த வத்திக்கானின்
அரச உறவுகளுக்கான செயலாளர் போல் ரிச்சட் கல்லாகர் தமது பயணத்தின் இடையில்
சுகயீனமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 நவம்பர் 3ஆம் திகதியன்று அவர் இலங்கை வந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்ட தலைவர்களை சந்தித்தார்.
எனினும் ஏனைய சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் சுகயீனமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் கொழும்பு தேசிய
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித
ஹேரத்தை கோடிட்டு, ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போல் ரிச்சட் கல்லாகர், தமது
பயணத்தின்போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்ட
தேவாலயங்களையும் பார்வையிடத் திட்டமிட்டிருந்தார்.
அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயகர்களையும் அவர் சந்திக்கவிருந்தார்.
.jpeg)




