மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் சுகாதார உதவியாளர்களுக்கான வினைத்திறன் உடைய தொடர்பாடல் பற்றிய பயிற்சி பாசறை.

 


 










வினைத்திறனான தொடர்பாடல் நோயாளர்களுக்கான தரமானதும் பாதுகாப்பானதுமான சேவைகளை வழங்குவதை உறுதி  செய்யும்.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் 30.10.2025 அன்று அனைத்து ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகள், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து சுகாதார உதவியாளர்களுக்கான வினைத்திறன் உடைய தொடர்பாடல் பற்றிய பயிற்சி பாசறை பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.R.முரளிஸ்வரர் அவர்களின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.

பொருத்தமான, வினைத்திறனுடனான தொடர்பாடலை எவ்வாறு எடுத்து செல்வது என்பது பற்றியும், இதில் சுகாதார ஊழியருக்கான பொறுப்புகள், கடமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு பொருத்தமான முறையில் கையாளுதல்,முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் வளவாளராக தர முகாமைத்துவம் மற்றும் நோயாளர் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி J. சகாயதர்ஷினி அவர்களும்,மாவடி வேம்பு புனர்வாழ்வு உளநல வைத்திய அதிகாரி J.ஜெயக்குமார் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.இப்பயிற்சிப்பாசறையை பிராந்திய சுகாதார பணிமனையின் தர மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.