திருமண பந்தத்தில் இணைகிறார் ஜீவன் தொண்டமான்.

 


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது.

நேற்று (19) நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

மணமகள் ரா. சீதைஸ்ரீ நாச்சியாரும், ஜீவன் தொண்டமானும் ஒரே வைத்தியசாலையில் 07 வருட இடைவெளியில் பிறந்தவர்கள்.

அதிலும் மகப்பேற்றின் பின்னர் இருவரும் தங்க வைக்கப்பட்டிருந்த அறை ஒரே இலக்க அறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜீவனின் பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகளின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்கு திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இங்கு இலங்கையிலும் நவ.28ஆம் திகதி ஜனாதிபதி உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிதிகளுக்கு விசேட விருந்துபசாரமொன்று இடம்பெறுமாம்.