மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 19.11.2025 ஆம் திகதியன்று பிற்பகல் 2.00 மணிக்குஇடம்பெற்றது.
பிரதேச செயலக உள்ளகக் கணக்காய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு அவதானிப்பாளராக மட்டக்களப்பு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு A .S சசிகரன், உதவிப் பிரதேச செயலாளர் திரு S.பார்த்திபன், கணக்காளர் திரு A. மோகனகுமார், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு A. சுதர்சன், நிர்வாக உத்தியோகத்தர் திரு V. தவேந்திரன் ,பதவி நிலை உதவியாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் நிதி ,நிருவாகம், திட்டமிடல், காணி , சமூக சேவை, சிறுவர் மற்றும் மகளிர், கிராம அபிவிருத்தி, கலாசாரம், விதாதா ஆகிய பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள் என்பன தொடர்பாக மூன்றாம் காலாண்டிற்கான மீளாய்வுகளும் தற்போது வரையான முன்னேற்றங்களும் பிரிவிற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களினால் முன்னளிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
பின்னர் கணக்காய்வு அத்தியட்சகர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோர்களால் ஆலோசனைகளும் கருத்துரைகளும் வழங்கப்பட்டு கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பிற்பகல் 4.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)




.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)






