இந்திய
சீதமிழ் தொலைக்காட்சியின் ஜனரஞ்சக பாடல் நிகழ்வான "சரிகமபா" இறுதிப்
போட்டிக்கு தெரிவான இலங்கையின் அம்பாறை மாவட்ட விநாயகபுரத்தைச் சேர்ந்த
பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன்
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில்..
எமது
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த தம்பி
சுகிர்தராஜா சபேசன் அவர்கள் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில் இறுதி
போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமையிட்டு எனது மனமார்ந்த இதயபூர்வமான
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
இச்
சரிகமபா பாடல் நிகழ்ச்சியில் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று மகுடம்
சூடி எமது நாட்டுக்கும் எமது அம்பாறை மாவட்டத்திற்கும் எமது
பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்து வெற்றி நாயகனாக மகுடம் சூட எனது
இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
( வி.ரி. சகாதேவராஜா)









