பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது- பிரதமர் ஹரிணி அமரசூரிய

 


வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்திவருவதாக குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இதேவேளை, அம்பாறை - தெஹியத்தகண்டிய பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.