மணல் இல்லா மாநகரமாக மட்டு. மாநகரை ஆக்குவோம், மக்கள் சந்திப்பில் சாணக்கியன் .



 









மட்டக்களப்பு மாநகரத்தை "மணல் இல்லா மாநகரம்" ஆக்குவோம் எனும் தொனிப்பொருளில் 11 ஆம் வட்டார மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினை மற்றும் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சத்திப்பு (04) சீலாமுனையில் இடம்பெற்றது.

பெரிய உப்போடை வட்டார மாநகர சபை உறுப்பினர் நடராஜா சுதர்சன தலைமையில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சனைக்கியன், மட்டு. மாநகரசபை பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது 11 ஆம் வட்டார மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்ட அதேவேளை, பொதுமக்களின் சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அவ்வாட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் தீர்வு எடுக்கப்பட்டன.

மிக முக்கியமாக, மாநகரசபையினால் ஒதுக்கப்படும் நிதியில் வட்டாரத்திலுள்ள குறுக்கு வீதிகளை கொங்றீட் இடுவது தொடர்பாகவும், மணல் இல்லா மாநகரத்தை உருவாக்கும் திட்டத்தில் மாநகர சபைக்குட்பட்ட சகல மணல் வீதிகளுக்கும் கிறவல் இடுவது தொடர்பாகவும்,
சீலாமுனை சனசமூக நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், வட்டாரத்தில் அமையப்பெற்ற வடிகால்கள் மிக நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாமல் காணப்படுவதை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும், மழை காலத்தில் வெள்ள நீர் கிராமத்தினுள் உட்புகாமல் இருப்பதற்கான தடையை ஏற்படுத்த ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் அமைத்தல்  தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

  சீலாமுனை நிருபர்